
திருப்பதி ஏழுமலையானை நடிகர் அஜித் இன்று வழிபட்டார்.
விவேகம் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளிவருகிறது. இதனால் ஏழுமலையானை வழிபட நடிகர் அஜித் திருமலைக்கு வந்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதங்களை வழங்கினர்.
கோயிலை விட்டு வெளியில் வந்த அஜித்தைக் காண ரசிகர்கள் திரண்டனர். அவருடன் இணைந்து செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்கள். இதைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அஜித்தைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.