‘கலாம் சலாம்’ - ஏவுகணை நாயகனுக்கு இசையால் ஒரு கௌரவம்!

மறைந்த இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு ‘கலாம் சலாம்’ என்கிற பெயரில் இசை வடிவம் பெற்றுள்ளது. 
‘கலாம் சலாம்’ - ஏவுகணை நாயகனுக்கு இசையால் ஒரு கௌரவம்!
Published on
Updated on
1 min read

மறைந்த இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு ‘கலாம் சலாம்’ என்கிற பெயரில் இசை வடிவம் பெற்றுள்ளது. 

இதற்கான பாடல் வரிகளைக் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியுள்ளார், சித் ஸ்ரீராம் குரலில், கிப்ரான் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். திரைப்பட இயக்குநர் வசந்த் சாய் இப்பாடலுக்குக் காட்சி வடிவம் கொடுத்துள்ளார்.

கிப்ரான் இந்தப் பாடலை பற்றிக் கூறுகையில், “இந்தப் பாடலிற்காக மொத்தம் 25 மெட்டுக்களை நான் உருவாக்கினேன், பின்னர் கலந்தாலோசித்து ஒரு மெட்டை முடிவு செய்தோம். வைரமுத்து இந்தப் பாடலை பற்றிய கூறியபோது இதுவரை நான் எழுதிய வரிகளிலேயே இதுதான் சிறந்தது என்று கூறினார். இந்த வீடியோவின் படப்பிடிப்பிற்காக கலாம் உண்மையில் தனது வாழ்நாட்களைச் செலவழித்த இஸ்ரோ போன்ற இடங்களில் காட்சி படுத்தியுள்ளார் வசந்த். இந்தப் பாடலை தெலுகு மொழியிலும் மொழிபெயர்க்க உள்ளோம், அந்தப் பாடலை பாடகர் பாலசுப்ரமணியம் அவர்களைப் பாட வைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறோம்.

கலாமிற்கு நினைவு மண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உருவாகும், பெரும்பாலும் அதற்கான ஆரம்பம் ஜூலை 27-ல் தொடங்கும். அந்த விழாவிற்கு ஆறு மாநிலங்களில் இருந்து முதலமைச்சர்கள் வரவழைக்கப்பட்டு, இந்திய பிரதமரின் தலைமையில் விழா நடைபெறும்”.

அப்துல் கலாம் நாட்டின் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். அவருக்காக உருவாகியுள்ள இந்தப் பாடல் அவருக்கான ஒரு கீதமாய் அமையும் என்கிறார்கள் இசைக் குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com