ரீமேக் திரைப்படங்களில் நடிக்க விருப்பமில்லை: சாய் பல்லவி!

இப்போது தான் தனது திரைவாழ்வைத் துவக்கி இருக்கும் சாய் பல்லவி போன்ற ஒரு புதுமுக நடிகை மட்டும் ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமலிருப்பது ஏன் என்றொரு கேள்வி அவரிடம் முன் வைக்கப்பட்டது.
ரீமேக் திரைப்படங்களில் நடிக்க விருப்பமில்லை: சாய் பல்லவி!

சாய்பல்லவி நடித்த ‘ஃபிடா’ திரைப்படம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாய் பல்லவிக்கு மிகச் சிறந்த அறிமுகத்தைக் கொடுத்த ‘பிரேமம் திரைப்படம் கடந்த ஆண்டில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. அப்போது மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சாய்பல்லவியைத் தான் அணுகினார்கள். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளாததால் வாய்ப்பு ஷ்ருதிஹாசனுக்குச் சென்றது. அப்போதே தனக்கு வெற்றியையும் , புகழையும் தேடித்தந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தை இந்தப் பெண் இப்படித் தவற விட்டு விட்டாரே என்றொரு பேச்சு அவரது ரசிகர்களிடையே இருந்து வந்தது.

டோலிவுட்டில் ரீமேக் திரைப்படங்களில் நடிப்பதில் மெகா ஸ்டார் முதல் பவர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்கள் வரை எல்லோரும் ஆர்வம் காட்டி நடிக்க முன்வரும் போது, இப்போது தான் தனது திரைவாழ்வைத் துவக்கி இருக்கும் சாய் பல்லவி போன்ற ஒரு புதுமுக நடிகை மட்டும் ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமலிருப்பது ஏன் என்றொரு கேள்வி அவரிடம் முன் வைக்கப்பட்டது. அப்போது சாய் பல்லவி சொன்ன பதில்; “மூலத் திரைப்படத்தில் தான் வெளிப்படுத்திய முக பாவங்களையே தன்னால் மீண்டும் அந்தக் கதாபாத்திரத்தின் ரீமேக்கிலும் வெளிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகமிருப்பதால் தன்னால் தனது மூலப்படக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யமுடியாமலாகி விடக்கூடும் என்ற சஞ்சலமிருப்பதால் தான் ரீமேக் படங்களில் நடிக்க தான் ஆர்வம் காட்டவில்லையென்று சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com