நடிகர்கள் அரசியலில் கால் பதிப்பது நாட்டுக்குக் கேடு

நடிகர்கள் அரசியலில் கால் பதிப்பது நாட்டுக்கு பெரும் கேடாக முடியும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
நடிகர்கள் அரசியலில் கால் பதிப்பது நாட்டுக்குக் கேடு

நடிகர்கள் அரசியலில் கால் பதிப்பது நாட்டுக்கு பெரும் கேடாக முடியும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர், பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
 சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) , மூத்தப் பத்திரிகையாளர் கெüரி லங்கேஷ் கொலை வழக்கு குறித்து பேசினால் எனக்கு முத்திரை குத்திவிடுகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. எனது மனதுக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாகவே பேசுவேன்.
 எந்தக் கட்சிக்கும், குழுக்களுக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல. எனக்கு கொடியும், கொள்கையும் இல்லை. நான் இடதுசாரியும் அல்ல; வலதுசாரியும் அல்ல. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கையில்லை. அரசியலுக்கு வருவதில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. எத்தனை அச்சுறுத்தல் வந்தாலும் அதற்கு இணங்காமல், கருத்துகளை தெரிவிப்பேன்.
 நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டால் கோழையாகிவிடுவேன். கெüரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், கொலையாளிகளை இன்னும் கண்டுபிடிக்க இயலவில்லை. கொலையாளிகளைப் பிடித்துவிடுவதாக அரசு கூறிவருகிறது. அரசு கூறுவதை நம்புகிறேன். எத்தனை நாளைக்கு தான் பொய்யை திரும்ப திரும்ப கூற இயலும். ஒருநாள் அரசு கூறுவது உண்மையா? பொய்யா? என்பது வெளியே வந்துதீரும். அதன்பிறகு போராட்டம் தவிர்க்க முடியாததாகும்.
 ஜிஎஸ்டிக்கு எதிராகப் பேசினால் மத்திய அரசுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறுகிறார்கள். கைவினைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதால், அந்தத் தொழில் கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கைவினைப் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டுமென்றால் அது மத்திய் அரசுக்கு எதிராக பேசுவதாகுமா?
 நடிகர்கள், அரசியலில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. மாறாக, தங்கள் ரசிகர்கள் குறித்த கடமைகளில் நடிகர்கள் கவனம் செலுத்த வேண்டும். நடிகர்கள் அரசியலில் கால் பதிப்பது நாட்டுக்கு பெரும்கேடாக முடியும். திரையரங்குகளில் நாட்டுப்பண் இசைக்கும்போது எழுந்து நிற்பதை நான் ஆதரிக்கவில்லை. எழுந்து நிற்பதன் மூலம் தேசப்பற்றை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிக்கிறேன் என்றார் பிரகாஷ்ராஜ்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com