'நெஞ்சில் துணிவிருந்தால்' நாளை முதல் ஓடாது: இயக்குநர் சுசீந்திரன் 

'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் நாளை முதல் திரையரங்களில் ஓடாது என்று அந்தப் படத்தின் இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
'நெஞ்சில் துணிவிருந்தால்' நாளை முதல் ஓடாது: இயக்குநர் சுசீந்திரன் 
Updated on
1 min read

சென்னை: 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் நாளை முதல் திரையரங்களில் ஓடாது என்று அந்தப் படத்தின் இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்து, கடந்த 9-ஆம் தேதி வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ . வெளியானவுடன் படம்   கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

பிறகு படம் பார்த்தவர்களின் கருத்துகளின்படி படத்தில் கதாநாயகி தொடர்பான காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டு படம் ஓடியது.

இந்நிலையில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் நாளை முதல் திரையரங்களில் ஓடாது என்று அந்தப் படத்தின் இயக்குநர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் சுசீந்திரன் அவரது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

நெஞ்சில் துணிவிருந்தால் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகியது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தமாதம் 15-ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த படம் ஓடாது.

இவ்வாறு அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com