

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கியுள்ள படம், அறம். இதில் நயன்தாராவுக்கு மாவட்ட ஆட்சியர் வேடம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி.
வெளியான நாள் முதல் அறம் படம் தொடர்ந்து அற்புதமான விமரிசனங்களைப் பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும், நல்ல படங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் படத்தைப் பாராட்டி ஊக்குவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அறம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததாவது:
அறம் படத்தை நடிகர் சிவக்குமார் பார்த்தார். படம், அவருக்கு மிகவும் பிடித்தது. அற்புதமான படத்தை அளித்ததற்காக இயக்குநரையும் படக்குழுவினரையும் அவர் மனதாரப் பாராட்டினார். 25 வருஷம் ஆச்சு, இப்படி ஒரு படம் பார்த்து. அசத்திட்டீங்க என்று அவர் பாராட்டினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.