

இயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.
2002-ல் வெளிவந்த ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் பிரசன்னா. இந்நிலையில் திருட்டுப் பயலே 2 படம் அவருடைய 25-வது படம். இதற்குத் திரையுலக நண்பர்கள் பலரும் பிரசன்னாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகையும் பிரசன்னாவின் காதல் மனைவியுமான சிநேகா ட்விட்டரில் இதுகுறித்து கூறியதாவது: வாழ்த்துகள். ட்வீட் மூலமாக இதைச் சொல்லவேண்டும் என்பதில்லை. ஆனால் அப்படிச் செய்வதற்குக் காரணம், உங்களுடைய கடினமான பயணம் குறித்து நான் அறிவேன். சொந்த உழைப்பால் முன்னேறியவர் நீங்கள். உங்களால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். வாழ்த்துகள் என்றார்.
இதற்குப் பதிலளித்துள்ள பிரசன்னா, மிக்க நன்றி கண்ணம்மா. நீயும் உன் காதலும் இல்லாவிட்டால் இந்த வனத்தில் நான் இயல்பாக இருந்திருக்கமாட்டேன். உன்னுடைய சந்தோஷம், பெருமிதத்தைக் காண்பதைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பெரிதல்ல என்று உருக்கமாகப் பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.