பிரபல மலையாள இயக்குநர் ஐ.வி. சசி சென்னையில் காலமானார்!

1948-ல் பிறந்த சசி, 1980-ல் மலையாள நடிகை சீமாவைத் திருமணம் செய்துகொண்டார்...
பிரபல மலையாள இயக்குநர் ஐ.வி. சசி சென்னையில் காலமானார்!

மலையாளத் திரையுலகின் பிரபல இயக்குநரான ஐ.வி. சசி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசி, இன்று காலை அவருடைய இல்லத்தில் காலமானார். சசியின் மனைவியும் நடிகையுமான சீமா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது 27-வது வயதில் முதல் படத்தை இயக்கினார் சசி. 1970,80,90களில் இவர் இயக்கிய படங்கள் அதிகக் கவனம் பெற்றன. 150-க்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். 1980-களில் ஹிந்திப் படங்களையும் அவர் இயக்கியுள்ளார். Avalude Raavukal, Devaasuram, Guru, Eeta, Angaadi,  1921, Vellathooval, Balram vs Tharadas, Anubhavam, Ayalkari, Inspector Balram, Sradha போன்ற ஹிட் படங்கள் சசிக்கு அதிகப் புகழைத் தந்தன. மோகன்லா, மம்மூட்டி ஆகியோரின் வளர்ச்சிக்கு இவருடைய படங்கள் அதிகம் உதவியுள்ளன. அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு, காளி, கோலங்கள் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களையும் இயக்கியுள்ளார். 

1948-ல் பிறந்த சசி, 1980-ல் மலையாள நடிகை சீமாவைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து 30 படங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்கள். இவருக்கு அனு என்கிற மகளும் அனி என்கிற மகனும் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com