தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஆகிறாரா ஜூலி?

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கிடைத்த புகழையும் மக்களின் அபிமானத்தையும் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இழந்து விட்டார் ஜூலி. 
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஆகிறாரா ஜூலி?
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கிடைத்த புகழையும் மக்களின் அபிமானத்தையும் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இழந்து விட்டார் ஜூலி. 

பொது இடங்களுக்கு செல்லும் போது மக்களின் விமரிசனத்தையும் சில இடங்களில் பாராட்டுக்களையும் பெற்று வரும் ஜூலி அடுத்து என்ன செய்யவிருக்கிறார் என்பதை ரசிகர்கள் கவனித்து வரும் நிலையில், ஜூலி கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியொன்றில் தொகுப்பாளராக பணிபுரிய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் 6-வது சீசனைத்தான் தொகுத்து வழங்கவிருக்கிறார் ஜூலி. இந்நிகழ்ச்சியில் நடிகர் கோகுல் மற்றும் கலா மாஸ்டர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு  ஓடி விளையாடு பாப்பா' ஒளிபரப்பாகவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com