உயிர் கொடுத்தாள் என் தோழி! செலீனா கோம்ஸ் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!

உலகப்புகழ் பெற்ற பாடகிகளில் ஒருவர் 25 வயதான செலினா கோம்ஸ். இவரது பாடல்களுக்கு
உயிர் கொடுத்தாள் என் தோழி! செலீனா கோம்ஸ் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!
Updated on
2 min read

உலகப்புகழ் பெற்ற பாடகிகளில் ஒருவர் 25 வயதான செலினா கோம்ஸ். இவரது பாடல்களுக்கு மட்டுமல்லாமல் இவரது தோற்றத்துக்கும் ரசிகர்கள் உண்டு. இன்ஸ்டாகிராமிலும் டிவிட்டரிலும் செலினா வெளியிடும் புகைப்படங்கள் குறைந்தபட்சம் 9 முதல் 10 மில்லியன் லைக்குகள் பெறும். இந்த அழகான பாடகியின் பாடல்கள் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளிக் குவிக்கும். இந்நிலையில் செலீனா திடீரென்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை குறைத்து வந்தார். மன அழுத்தப் பிரச்னையால் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களை அவர் தவிர்த்து வந்தார்.

இது அவரது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உட்படுத்தியது. ஆனால் செலீனாவின் இடைவெளிக்குக் காரணம் சமீபத்தில் தான் தெரிந்தது. தனக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்தது என்று தனது டிவிட்டரில் தெரிவித்தார் செலீனா. மன நலப் பிரச்னைகள் ஏற்பட்டதன் காரணமும் தனக்கு ஏற்பட்ட லூபஸ் பாதிப்பின் பக்க விளைவினால்தான் என்று அவர் கூறினார்.

செலீனாவுக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்து வந்ததை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தார்அ வரது நெருங்கிய தோழியான நடிகை ஃபிரான்சியா ரைஸா. ஆறுதல் கூறியதுடன் நில்லாமல், பிரான்சியா செலீனாவுக்கு தகுந்த நேரத்தில் சிறுநீரக தானமும் செய்துள்ளார். நட்புக்காக ஃபிரான்சியா செய்த செயல் உலகம் முழுவதிலிருந்து செலீனாவின் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் அவருக்குப்  பெற்றுத் தந்துள்ளது. ஆனால் எதையும் எதிர்ப்பாராமல் தன் தோழி செலீனா விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே ஃபிரான்சியாவின் வேண்டுதலாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் செலினா.

'லூபஸ் பாதிப்பின் காரணமாக ஒரு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற வேண்டி இருந்தது. இப்போது அதிலிருந்து மீண்டு வருகிறேன். என்னால் பழையபடி சீரான உடல்நிலையில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முன்பை விட இப்போது தெம்பாக உணர்கிறேன்' என்று டிவிட்டரில் கூறியுள்ளார் செலீனா.

மேலும் அவர் கூறுகையில், 'இன்னும் சில காலம் உங்களுடன் பயணம் செய்யப் போகிறேன். என் குடும்பத்துக்கு, எனக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்களுக்கு, அங்கு பணி செய்தவர்களுக்கு என எல்லோருக்கும் ஆத்மார்த்தமாக நன்றி கூறுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக என் அழகான தோழி ஃபிரான்சியா ரைஸாவுக்குத்தான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவள் எனக்கு சிறுநீரகத்தை நன்கொடையாக அளித்ததன் மூலம் எனக்கு மிகப் பெரிய பரிசைக் கொடுத்துள்ளாள். எனக்காக இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறாள். உன்னை மிகவும் நேசிக்கிறேன். லவ் யூ ஸோ மச். நான் உன்னைப் பெறுவதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

செலீனா கோம்ஸ் ஆபரேஷனுக்குப் பிறகு கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியில் தன் ஆண் நண்பருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com