ஏப்ரல் 13 அன்று வெளியாகவுள்ள 'மெர்குரி': காரணத்தை விளக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

இந்தப் படத்துக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி, சினிமாவை நம்பியுள்ள என் நூற்றுக்கணக்கான படக்குழுவினருக்காகவும்...
ஏப்ரல் 13 அன்று வெளியாகவுள்ள 'மெர்குரி': காரணத்தை விளக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
Published on
Updated on
1 min read

இறைவி படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் - மெர்குரி. 

பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு - திரு.

கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஏப்ரல் 13 அன்று மெர்குரி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் அமலில் இருக்கும் வேலை நிறுத்தத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெளனப் படம் என்பதால் ஏப்ரல் 13 அன்று வெளியாவது உறுதி என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

போராட்டங்கள் மற்றும் பந்த் ஆகியவற்றுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இன்று வெளியாகவிருந்த மெர்குரி பட டிரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மெர்குரி, மெளனப் படம் என்பதாலும் ஏப்ரல் 13 அன்று உலகம் முழுக்க வெளியாகவுள்ளதாலும் இந்தப் படத்துக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி, சினிமாவை நம்பியுள்ள என் நூற்றுக்கணக்கான படக்குழுவினருக்காகவும் பட வெளியீட்டுக்கான சூழலில் உள்ளோம். எனவே இன்னும் ஒருநாள் கழித்தோ அல்லது அடுத்த இருநாளிலோ டிரெய்லர் வெளியிடப்படும். இந்நிலையில் உங்களுடைய ஆதரவைக் கோருகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com