ஊர் ஊராக பெண் தேடிச் சென்ற ஆர்யா கடைசியில் எந்த ஊரு மாப்பிள்ளை? இறுதிச் சுற்றுப் பரபரப்பு!

கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்றொரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.
ஊர் ஊராக பெண் தேடிச் சென்ற ஆர்யா கடைசியில் எந்த ஊரு மாப்பிள்ளை? இறுதிச் சுற்றுப் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்றொரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆர்யா, இந்த நிகழ்ச்சியின் மூலமாகத் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு வந்து குவிந்த விண்ணப்பங்களில் இருந்து 16 பெண்களை ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சி மூலமாகத் தேர்வு செய்திருந்தார். இந்த 16 பெண்களும் ஆர்யாவுடன் ஜெய்ப்பூர் சென்று அங்கு தங்கி இருந்து ஒருவருக்கொருவர் பழகிப் பார்த்து எந்தப் பெண் ஆர்யாவுக்குப் பொருத்தமானவர் என்பதை ஆர்யாவே நிகழ்ச்சியின் முடிவில் கண்டடைவது தான் இந்நிகழ்ச்சிக்கான கான்செப்ட். ஒருவழியாக கலந்து கொண்ட பெண்களில் பலரும் வடிகட்டப்பட்டு தற்போது அபர்னதி, அகாதா, சுஸானா, ஸ்வேதா, சீதாலட்சுமி எனும் 5 பெண்களில் வந்து நிற்கிறது இந்த ஷோ. இந்த 5 பெண்களிலும் 4 பேர் வடிகட்டப்பட்டு இறுதியில் முழுதாக ஆர்யாவின் மனதைக் கவர்ந்த பெண் எவரோ அவரே அவருக்கு மனைவியாகப் போகிறவர் என ஆர்யாவும், சேனலும் அறிவிப்பார்கள். இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரும் நடிகை சங்கீதா தான் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட.

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆர்யா ஒவ்வொரு பெண்களின் வீட்டுக்கும் சென்று அவர்களின் குடும்பத்தை சந்தித்து வரும் படலம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்றைய ஷோவில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் (மீண்டும்) ஆர்யாவின் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். கடந்த முறை வந்தது போலவே, இந்த தடவை சிறப்பு விருந்தினராக வராமல், ஒரே ஒரு நடனமாடியுள்ளார். தன் ட்விட்டரில் அதைப் பதிவிட்டுள்ளார் வரூ. 

அந்த புகைப்படங்களின் பின்னணியை பார்க்கும்போது திருமண நிகழ்ச்சி போல அந்த செட் உள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் உண்மையிலேயே நிச்சயம் ஆகிவிட்டதா என்று ரசிகர்கள் குழம்பியிருக்கின்றனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியால் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியின் டிஆர்பி எக்கச்சக்கமாக எகிறிவிட்டது என்கிறது சானல் வட்டாரம். அண்மையில்தான் தொடக்கப்பட்ட இந்த தொலைக்காட்சி, தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆர்யாவின் இந்த நிகழ்ச்சியை 11000 ஆயிரம் பேர் இந்த  வாரம் பார்த்துள்ளனர் என்கிறது புள்ளிவிபரம்.

மாப்பிள்ளை ஆர்யாவை மணம் புரியப் போகும் யோகம் எந்த மணப்பெண்ணுக்கு என்பதைக் காண, எரியும் பிரச்னைகளுக்கு இடையேயும் தமிழகம் விரும்புகிறது என்பது நகை முரண் அல்ல, சுடும் நிஜம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com