சீனாவில் சூப்பர் ஹிட் ஆகியுள்ள மற்றொரு ஹிந்திப் படம்!


இந்தியாவைப் போலவே சீனாவிலும் ஹிந்திப் படங்கள் அமோக வசூலைப் பெற்று வருகின்றன.
டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பஜ்ரங்கி பைஜான் படங்கள் சீனாவில் இந்தியாவில் வசூலித்ததற்கு நிகராக அல்லது அதைவிடவும் அதிகமாக வசூலித்த நிலையில் மற்றொரு ஹிந்திப் படமும் வசூலில் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
சாகேத் செளத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படம் - ஹிந்தி மீடியம். இர்ஃபான் கான், சபா ஓமர், தீபக் டோப்ரியால், திஷிதா ஷேகால் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கடந்த 4-ம் தேதி சீனாவில் வெளியானது ஹிந்தி மீடியம். முதல் நாளன்று ரூ. 22 கோடி வசூலித்தது. அடுத்த நாள் இதன் வசூல் இரு மடங்காகியுள்ளது. 2-ம் நாள் வசூல் ரூ. 41 கோடி. இதன் அடிப்படையில் இரு நாள்களில் ரூ. 63 கோடி வசூலித்துள்ளது ஹிந்தி மீடியம். இதையடுத்து சீனாவில் சூப்பர் ஹிட்டான ஹிந்திப் படங்களின் வரிசையில் ஹிந்தி மீடியமும் இணைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...