ஐபிஎல் புறக்கணிப்பு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு!

விளையாட்டுக்கு நான் எதிரி அல்ல, ஆனால் பெரிய அளவிலான புறக்கணிப்பு நிகழும்போது, சரியான நபர்களின் கவனத்தை ஈர்க்கும்...
ஐபிஎல் புறக்கணிப்பு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு!
Published on
Updated on
1 min read

காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் வைக்கப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதுகுறித்து தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இந்த வருட ஐபிஎல் போட்டியைத் தான் புறக்கணிக்கப்போவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். 

எது அவசியம்? எனக்கு விவசாயம் தான். அதனால் ஐபிஎல் பார்க்க மாட்டேன். அதைப் பற்றி எழுத மாட்டேன். நீங்கள் எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தனஞ்ஜெயன். 

இதுபற்றி நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ட்விட்டரில் எழுதியதாவது:

கடைசியாக, எப்படி எதிர்வினை கொடுக்கவேண்டுமோ அப்படித் தருகிறோம். காவிரி நீர் வழிந்தோடும்போது நாம் கர்நாடகாவைக் காப்பாற்றினோம். காவிரியோ முல்லைப் பெரியாறோ இயற்கை வளங்கள் அதன்போக்கில் பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும். அமைதியான போராட்டத்தையும் ஐபிஎல் புறக்கணிப்பையும் நான் ஆதரிக்கிறேன். விளையாட்டுக்கு நான் எதிரி அல்ல, ஆனால் பெரிய அளவிலான புறக்கணிப்பு நிகழும்போது, சரியான நபர்களின் கவனத்தை ஈர்க்கும். முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அது தீர்க்கப்படாமல், நமது விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்படாமல், நீண்டகாலமாக இருக்கும் இப்பிரச்னையை மத்திய அரசு தீர்க்காமல், தேசிய அளவிலான விளையாட்டை எப்படிக் கொண்டாட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com