மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் புகைப்படம் வைரலாகிறது!
டோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் . இப்படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் உருவாகிறது.
தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் ‘நடிகையர் திலகம்’ என்று தமிழிலும் உருவாகிவருவது அனைவரும் அறிந்த செய்தி. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘சாவித்திரி’ கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமந்தாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமந்தா இப்படத்தில் மதுரவாணி எனும் பத்திரிகையாளராக நடிக்கிறார். திரைப்படக் கதாசிரியர் அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வர ராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன் பாபுவும் நடிக்கின்றனர்.
அண்மையில் வெளிவந்த ஒரு போஸ்டரில் மதுரவாணி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தாவின் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் நடித்திருப்பது பெருமைக்குரியது என்று சமந்தா ட்விட்டரி பதிவு செய்ய திரைப் பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகிறார்கள்.
Really happy to be a part of such a wonderful film I hope you love Madhuravani as much as I loved being herMahanatinagashwinMahanationMay9thpic.twitter.com/mdashSamantha Akkineni SamanthaprabhuApril 6 2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.