தன்னை விட 25 வயது குறைவான காதலியை கரம்பிடிக்கிறார் நடிகர் மிலிந்த் சோமன்!

53 வயதான நடிகர் மிலின்ட் சேமான், 27 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
தன்னை விட 25 வயது குறைவான காதலியை கரம்பிடிக்கிறார் நடிகர் மிலிந்த் சோமன்!
Published on
Updated on
1 min read

53 வயதான நடிகர் மிலிந்த் சோமன், 27 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். மிலிந்த் சோமன் 2006-ம் ஆண்டு  நடிகை மைலின் ஜம்பானலை திருமணம் செய்து அவரை 2009-ல் விவாகரத்து செய்தவர்.

பாலிவுட் சினிமாவில் நடிகராகவும், மாடலிங் செய்பவராகவும் இருந்து வருபவர் மிலிந்த் சோமன். அவருக்கு வயது 53. பாஜி ராவ் மஸ்தானி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மிலிந்த்.  இவர் 27 வயது பெண்ணான அங்கிதா கொன்வருடன் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக டேட்டிங்கில் இருந்துள்ளார். அஸாமைச் சேர்ந்த அங்கிதா ஒரு விமானப் பணிப்பெண்.

இந்த காதல் ஜோடி அடிக்கடி ஒன்றாக பயணம் செய்து அந்தப் புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவர். அதற்கு லைக்குகளும் அதே சமயம் கண்டனங்களும் தொடர்ந்து வந்துள்ளன. ஒருமுறை பிரியங்கா சோப்ரா மிலிந்த் சோமனை ட்விட்டரில் வன்மையாக கண்டித்துள்ளார். தன்னை விட பாதி வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங் செய்யும் வயோதிகர் என்றெல்லாம் அவர்களை எதிர்த்து விமரிசனம் எழுந்தது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த ஜோடி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தங்கள் திருமணத்தை விரைவில் முடிக்கவிருக்கிறார்கள்.

வரும் ஏப்ரல் 21-ம் தேதி அங்கிதாவை திருமணம் செய்யவிருக்கிறார் மிலிந்த் என்று கூறப்படுகிறது. இது குறித்து வெளிப்படையாக அவர்கள் தெரிவிக்காவிட்டாலும், அங்கிதாவின் பெற்றோர்களை அண்மையில் சந்தித்து திருமணத்தை உறுதி செய்தார் என்கிறது மிலிந்த் தரப்பு. இவர்களது திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com