49 நாள்களுக்குப் பிறகு புதிய தமிழ்ப்படங்கள் வெளியீடு: நாளை முதல் 'மெர்க்குரி'! 

ஏப்ரல் 13 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, பிறகு தள்ளிவைக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு முன்னுரிமை...
49 நாள்களுக்குப் பிறகு புதிய தமிழ்ப்படங்கள் வெளியீடு: நாளை முதல் 'மெர்க்குரி'! 
Published on
Updated on
1 min read

டிஜிட்டல் கட்டணக் குறைப்பு, திரையரங்குகள் டிக்கெட் கட்டணம் கணினி மயமாக்க வேண்டும், பெரிய - சிறிய பட்ஜெட் படங்கள் டிக்கெட் விலை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 48 நாள்களாக தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து நாளை முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. 

49 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மெர்க்குரி படம் நாளை வெளியாகவுள்ளது. ஏப்ரல் 13 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, பிறகு தள்ளிவைக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக நாளை இந்தப் படம் மட்டுமே வெளிவருகிறது.

இறைவி படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் - மெர்குரி. 

பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு - திரு.

கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com