முதல் நாளன்று வசூல் மழை: இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ‘அவெஞ்சர்ஸ்’!

இந்தியாவில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் கண்ட படம்...
முதல் நாளன்று வசூல் மழை: இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ‘அவெஞ்சர்ஸ்’!
Updated on
1 min read

ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) படம் நேற்று வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் இந்தியாவில் வசூல் மழை பொழிந்து வருகிறது. ஒரே நாளில் இந்தியாவில் ரூ. 40.13 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் கண்ட படம் என்கிற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.  வரிகள் நீங்கலாக இந்தியாவில் நான்கு மொழிகளிலும் ரூ. 31.30 கோடி வசூலித்து இந்த வருடம் இந்தியாவில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

2018-ல் இந்தியாவில் வெளியான படங்களில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படம் என்கிற பெருமை பாகி 2 வசம் இருந்தது. அந்தப் படம் முதல் நாளன்று ரூ. 25.10 கோடி வசூலித்தது. மூன்று மொழிகளில் வெளியான பத்மாவத், முதல் நாளன்று ரூ. 24 கோடி வசூலித்தது.

இந்நிலையில் ரூ. 31.30 கோடி வசூலித்து இந்த வருடம் இந்தியாவில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படம் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார். இந்தியாவில் இந்தப் படம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட திரையரங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com