சர்வதேசக் கவனம் பெறுகிறார் விஜய்: சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ள மெர்சல்!

சீனாவில் டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பஜ்ரங்கி பைஜான் போன்ற ஹிந்திப் படங்கள் வெளியாகி அதிக வசூலை அள்ளி சாதனை படைத்தன... 
சர்வதேசக் கவனம் பெறுகிறார் விஜய்: சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ள மெர்சல்!
Published on
Updated on
1 min read

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. எனினும், மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மெர்சல் படம் சீனாவில் விரைவில் வெளியாகவுள்ளது. இதன் உரிமத்தை சீனாவைச் சேர்ந்த ஹெச்.ஜி.சி. எண்டர்டெயிண்ட் பெற்றுள்ளது. மாண்டரின் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த வருடம் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்திலோ மெர்சல் படம் சீனாவில் வெளியாகவுள்ளது. 

மெர்சல் கதையைப் போலவே அமைந்துள்ள Dying to Survive என்கிற சீனமொழிப் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து மருத்துவத்துறையில் ஏற்படும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் படமாக உள்ள மெர்சல் படமும் சீன மக்களிடையே பாராட்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் உணர்வுபூர்வமான படம் என்கிறார் ஹெச்.ஜி.சி. எண்டர்டெயிண்ட் நிறுவனத்தின் தலைவர் லி யிங். 

சீனாவில் டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பஜ்ரங்கி பைஜான் போன்ற ஹிந்திப் படங்கள் வெளியாகி அதிக வசூலை அள்ளி சாதனை படைத்தன. இந்நிலையில் ஹிந்திப் படங்களுக்குப் போட்டியாக தமிழ்ப் படங்களும் விரைவில் வெளியாகவுள்ளன. அதற்கான தொடக்கமாக மெர்சல் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018-ம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ  விருதுப் பரிந்துரைப் பட்டியல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரு பரிந்துரைப் பட்டியல்களில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் மெர்சல் படம் சீனாவில் வெளியாகவிருப்பது விஜய் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com