இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பு.
ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமாக தகவல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கு 'நவாம்' என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்து வரும் நான்கு ஹீரோக்களின் ஃபஸ்ட் லுக் புகைப்படத்தை ஒவ்வொரு நாளாக வெளியிடவிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். அதன்படி இன்று முதல் நான்கு நாட்களுக்கு அடுத்தடுத்து நான்கு நாட்களுக்கு ஒவ்வொரு ஹீரோவின் ஃபஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.