ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாகிறது: வித்யா பாலன் கதாநாயகி?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார்...
ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாகிறது: வித்யா பாலன் கதாநாயகி?
Updated on
1 min read

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் கதாநாயகி, ஜெயலலிதா வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விப்ரி மீடியாவைச் சேர்ந்த பிருந்தா இப்படத்தைத் தயாரிக்கிறார். சைமா திரைப்பட விருதுகள் இவர் தலைமையில் வருடாவருடம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. 

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று இப்படத்தின் தொடக்க விழா நடைபெறவுள்ளது. அதே தினம் படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் வெளியிடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com