பிக் பாஸ் 2 இறுதிச் சுற்றில் ரித்விகா, மும்தாஜ், பாலாஜி வரலாம்: ஆர்ஜே வைஷ்ணவி!

ரித்விகாவை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இறுதிச் சுற்று வரை செல்லக்கூடியவர்கள் எனத் தான் நம்புவது மும்தாஜையும், பாலாஜியையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிக் பாஸ் 2 இறுதிச் சுற்றில் ரித்விகா, மும்தாஜ், பாலாஜி வரலாம்: ஆர்ஜே வைஷ்ணவி!
Published on
Updated on
1 min read

ஸ்டார் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 ரியாலிட்டி ஷோவில் இருந்து கடந்த வாரம் ஆர்.ஜே வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். தமிழில் பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தியாக இருந்தும் தனக்கு பிரபலத்தன்மை போதாததும் கூட மக்கள் தனக்கு எதிராக ஓட்டளித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து தாம் வெளியேற்றப்படுவதற்கான காரணமாக இருந்திருக்கலாம் என நம்பும் வைஷ்ணவி அதை யூடியூப் நேர்காணலொன்றில் தெரியப்படுத்தி இருந்தார்.

பிக் பாஸ் 2 போட்டியிலிருந்து வைஷ்ணவி வெளியேறிய நிலையில் அவரிடம் இறுதிச் சுற்றில் யாரெல்லாம் இருக்கலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு... ரித்விகா, மும்தாஜ், பாலாஜி மூவரும் வரலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். காரணம் பிக்பாஸ் வீட்டில் தாம் எதற்காக அந்த ஷோவில் கலந்து கொண்டோம் என்ற தெளிவு ரித்விகாவுக்கு மட்டுமே உண்டு என்றும், அதனால் பிக்பாஸ் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி தன்னுடன் இருப்பவர்களையும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ குறித்த விஷயங்களை அவ்வப்போது நினைவூட்டி ‘இது ஒரு ரியாலிட்டி கேம் ஷோ... இங்கே நாம் எதற்காக வந்திருக்கிறோமோ அந்தக் கடமையைச் சரியாகச் செய்வதோடு நமது இயல்பு நிலையையும் மறக்கக் கூடாது. போலியாக எதையும் செய்து நம்மை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றெல்லாம் பேசி உடனிருப்பவர்களையும் உற்சாகப் படுத்திச் செல்லக்கூடிய ஒரு சமநிலை மனப்பான்மை பிக்பாஸ் வீட்டில் ரித்விகாவுக்கு மட்டுமே உண்டு. எனவே அவர் இறுதிச் சுற்றுக்கு வருவார் என்று நான் நம்புகிறேன் என வைஷ்ணவி தெரிவித்தார். 

ரித்விகாவை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இறுதிச் சுற்று வரை செல்லக்கூடியவர்கள் எனத் தான் நம்புவது மும்தாஜையும், பாலாஜியையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com