இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நயன்தாரா, இளையராஜா, வெற்றிமாறன், பா. விஜய்: இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியீடு!

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:37 pm

எழில்

இந்த வாரன் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. 

இமைக்கா நொடிகள், 60 வயது மாநிறம், ஆருத்ரா, அண்ணனுக்கு ஜே.

ஆகஸ்ட் 30 அன்று இமைக்கா நொடிகளும் அடுத்த நாளன்று இதர மூன்று படங்களும் வெளியாகின்றன. 

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடித்துள்ளார். ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - 60 வயது மாநிறம். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளார்கள். விஜி வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பா. விஜய், பழனி பாரதி, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.

இயக்குநர் வெற்றிமாறனும் ஃபாக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் - அண்ணனுக்கு ஜே. தினேஷ், மஹிமா நம்பியார் நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் இயக்கியுள்ளார். 

பாடலாசிரியர் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் - ஆருத்ரா. இசை - வித்யாசாகர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.