நமீதா நடிக்கும் அகம்பாவம் படத்தின் ஒரு வரிக் கதை இதுதான்!

நமீதா நடிக்கும் அகம்பாவம் படத்தின் ஒரு வரிக் கதை இதுதான்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நமீதா நடிக்கும் படம் ‘அகம்பாவம்’ இப்படம் ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது.
Published on

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நமீதா நடிக்கும் படம் ‘அகம்பாவம்’ இப்படம் ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. தயாரிப்பாளரும், நடிகருமான வராகி படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரபல நாளிதழின் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இயக்குநர் ஸ்ரீமகேஷ் படத்தை இயக்க, ஒளிப்பதிவை ஜெகதீஷ் வி.விஸ்வம் ஏற்றுள்ளார். சண்டைக் காட்சிகளை இந்தியன் பாஸ்கர் செய்கிறார். சின்னு சதீஷ் படத்தொகுப்பையும், அருணகிரி இசையமைப்பையும் ஏற்றுள்ளனர்.

நமீதா இந்தப் படத்திற்காக பத்து கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார். பத்திரிகையாளரும் பெண் போராளியுமான நமீதாவிற்கும் ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் வராகிக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் 'அகம்பாவம்' படத்தின் ஒருவரிக் கதை.  பரபரப்பான கதையம்சம் கொண்ட இப்படம் சமூக அக்கறையுடன் உருவாகிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளராக பணி புரிந்துள்ள நடிகர் வராகி, தன் சுய அனுபவங்களையும் போராட்டங்களையும் கோர்த்து 'அகம்பாவம்’ படத்திற்காக திரைக்கதை அமைத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com