தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

நடிகை அமலா பாலிற்கு பாலியல் தொல்லை! புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் நபரைக் கைது செய்த போலீஸ்!!

நடிகை அமலா பாலிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று மாலை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து

Published On :30 ஜனவரி 2024, 5:38 pm IST

நடிகை அமலா பாலிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று மாலை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்தில் அந்த நபரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது காவல் துறை.

தமிழ் உட்படப் பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அமலா பால் தனது காதல் கணவனைப் பிரிந்து இப்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலேசியாவில் நடக்கவிருக்கும் ‘டேன்ஸ் தமிழச்சி’ கலை நிகழ்ச்சிக்காக தி.நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள நடன இயக்குநர் ஸ்ரீதரின் நடனப் பள்ளியில் நேற்று மாலை நடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த தொழிலதிபர் அழகேஸ்வரன் என்பவர் கலை நிகழ்ச்சிக்காக மலேசியா செல்லும் போது மற்றுமொரு பார்ட்யிலும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அங்குள்ள தனது நண்பருடன் இணைந்து டின்னர் சாப்பிட வேண்டும் என்று கூறியதோடு ‘செக்ஸ் டிரேட்’ செய்வதைப் போல பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் மூண்டுள்ளது, உடனே அங்கு ஓடி வந்த அமலா பாலின் உதவியாளர் அழகேஸ்வரனை அந்த இடத்தில் இருந்து அகற்ற முயன்றபோது கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

Story image

நடனப் பள்ளியுடன் தொடர்புடைய யாரோதான் தான் இந்த நேரத்தில் இங்குப் பயிற்சிக்கு வரும் தகவலை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்றும், தான் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு திரை பிரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன? அதனால் தான் இந்த பிரச்னை பற்றி வாய் திறக்காமல் இருப்பது பெரிய தவறு என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அமலா பால் புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திலேயே மாம்பலம் காவல் துறையினர் அழகேஸ்வரனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றி வரும் அழகேஸ்வரன் மலேசியாவில் இருக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவருக்காகத் தான் அமலா பாலிடம் இப்படிப் பேசியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஆழகேஸ்வரன் இந்தக் குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார், அமலா பாலின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

Story image

இவர் மீது பெண்ணின் மாணத்திற்குக் களங்கம் விளைவித்தல் (354A), பாலியல் தொல்லை அளித்தல் (509) எனப் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.