

நடிப்பு, திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு என பரபரப்பாக இருந்த ராணி முகர்ஜி, 2014-ல் வெளிவந்த மர்தாணி படத்துக்குப் பின் திரைப்படங்களில் நடிக்கவில்லை. நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தற்போது யஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் மணீஷ் ஷர்மா தயாரிப்பில் சித்தார்த் பி மல்ஹோத்ராவின் இயக்கத்தில் ஹிச்கி (Hichki) என்ற படத்தில் நடித்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரமாக அப்படம் இருக்கவே மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ராணி.
இப்படத்தைப் பற்றி ராணி முகர்ஜி கூறுகையில், ‘நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பலவீனம் இருக்கும். அது நம்மை இயலாமைக்குள் தள்ளி ஓரேடியாக நம்மை வீழ்த்தப் பார்க்கும். அதற்குக் காரணம் சூழலாக இருக்கலாம் இல்லை வேறு ஏதாவது தற்காலிகமான பின்னடைவாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மீறி நிச்சயம் நம்மால் வெற்றியாளராக மாற முடியும் என்ற பாசிட்டிவ் விஷயத்தை உள்ளடக்கிய படம் இது. கதை பிடித்துவிட்டதால் உடனே நடிக்க சம்மதித்தேன்’என்றார் ராணி முகர்ஜி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், முதலில் பிப்ரவரி 23-ம் தேதி வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது முழு ஆண்டுத் தேர்வு பரபரப்பில் குழந்தைகளும் பெற்றோர்களும் இருப்பார்கள் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.