

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
'எனை நோக்கி பாயும் தோட்டா’படத்தைப் பற்றி கெளதம் மேனன் கூறுகையில், ‘நான்கு வருடங்கள் தொடரும் ஒரு காதல், அதன் பின் ஏற்படும் பிரிவு, மீண்டும் அந்தப் பெண்ணைத் தேடிப் போவது, அந்தத் தேடலின் போது எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் மையக் கதை’ என்றார்.
காதலியை தேடிச் செல்லும் காதலன் இந்த ஒன் லைன் கதையை மிகவும் சுவாரயஸ்யமாகவும், விறுவிறுப்பாக காட்சிபூர்வமாகவும் தன்னுடைய பல படங்களை எடுத்துள்ளார் கெளதம் மேனன். இதே வரிசையில் டாப் ஒன்னில் உள்ள விடிவியின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவிருக்கிறாராம்.
விடிவி வெளிவந்து எட்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அதன் நாயகன் கார்த்திக் இப்போது என்ன செய்கிறான்? அவனது வாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன? காதல் அவனை கனியச் செய்துவிட்டதா என இதுபோன்ற சில கேள்விகளுக்குப் பதில் தேடும் வகையில் எழுதிய திரைக்கதை தான் விடிவி பார்ட் 2.
இதன் டைட்டில் ‘ஒன்றாக’. கார்த்திக்குடன் (சிம்பு) அவனது மூன்று நண்பர்களையும் நடிக்கவைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எதுவும் இன்னும் முடிவாகவில்லை’ என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கெளதம் மேனன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.