ரசிகரின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் அதிரடியான பதிலடி!

அந்த புகைப்படத்திற்கு எதிர்மறையாக பல கருத்துக்களை பதிவிட்டனர்.
ரசிகரின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் அதிரடியான பதிலடி!
Updated on
2 min read

கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்ட சமந்தா தனது நட்சத்திர குடும்பத்தாரின் சம்மதத்துடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ‘இரும்புத்திரை’, ‘மகாநதி’  'ரங்காஸ்தலம்’,  ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் தொடர முடிந்ததன் காரணம் அவரின் கடின உழைப்பும், விடா முயற்சியும்தான். வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது அத்தனை சுலபமல்ல. 

ஒரு பெண் திருமணத்துக்கு பிறகு தன் இயல்பை ஏன் ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் சமந்தா. ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர். இந்நிலையில், அண்மையில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவேற்றும் புகைப்படங்கள் சில ரசிக்கப்பட்டு அவருக்கு பாராட்டுக்களை அள்ளிக் குவித்து வந்தது. 

ஆனால் சமந்தா பிகினி உடையில் பதிவிட்டிருந்த ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கிவிட்டது. மாலத்தீவுக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற சமந்தா, நீச்சலுடையில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, மிகவும் சோர்வாக உள்ளது சற்று ஓய்வெடுக்கிறேன் என்று பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு எதிர்மறையாக பல கருத்துக்களை பதிவிட்டனர்.

'உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எவ்வித கருத்தும் கூறவில்லை. ஆனால் அகினேனி குடும்பத்து மருமகளாக இருந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் நீங்கள் இத்தகைய புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவது சரியல்ல. பாலிவுட் நடிகைகள் கூட திருமணத்துக்குப் பிறகு இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதில்லை' என்று கருத்து தெரிவித்து பலரும், சமந்தாவை திட்டியும் பின்னூட்டம் பதிவிட்டிருந்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சமந்தா, ‘I WRITE MY RULES YOU SHOULD WRITE M̶I̶N̶E̶ YOURS’ என்று பதிலடி கொடுத்து சர்ச்சையை ஒரே போடாக போட்டு முடிவுக்குக் கொண்டு வந்தார். இன்ஸ்டாகிராமில் சமந்தாவுக்கு மூன்று மில்லியனுக்கு மேலான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com