சென்னை: திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் கமல் அறிவித்துள்ளார்.
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக இராமநாதபுரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் கமல்ஹாசன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் கமல் அறிவித்துள்ளார்.
தீவிர அரசியலில் ஈடுபட்ட பின்னரே திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதைப் பற்றி முடிவெடுக்க இயலும் என்றும், தற்பொழுது 3 படங்களில் ஒப்பந்தம் ஆக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் பின்னரே படங்களில் தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவெடுக்க இயலும் கூறியுள்ள அவர், காலையில் வெளியான தகவல்களை மறுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



