தந்தையுடன் இணைந்து நடிக்க உள்ள பிரபல நடிகை!
பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது தந்தையும் நடிகருமான சரத்குமாருடன் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது தந்தையும் நடிகருமான சரத்குமாருடன் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் பாம்பன் படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் இப்படம் ஒரு பேண்டஸி படமாக உருவாகும் என்று தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது தந்தையுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதுகுறித்து வரலட்சுமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , "அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது: படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...