பத்மாவத் சர்ச்சைகளைத் தொடர்ந்து ரெளடியாகிறாரா தீபிகா படுகோன்?

ஒருவழியாக பத்மாவத் படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்று நடிகை தீபிகா படுகோனின் மனக்குறையை தீர்த்தது. 
பத்மாவத் சர்ச்சைகளைத் தொடர்ந்து ரெளடியாகிறாரா தீபிகா படுகோன்?
Published on
Updated on
2 min read

ஒருவழியாக பத்மாவத் படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்று நடிகை தீபிகா படுகோனின் மனக்குறையை தீர்த்தது. 

தீபிகாவைச் செல்லமாக பகடி செய்து அண்மையில் பிக் பாஸ் அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். தீபிகா மற்றும் கத்ரீனா ஆகிய இருவருடன் நடிக்கும் ஹீரோக்களின் உயரம் அவர்களை விட அதிகமாக இருந்தால்தான் அந்த ஜோடி பார்க்க அம்சமாக இருப்பார்கள். அமீர், ஷாஹித் போன்ற உயரம் குறைந்த நடிகர்கள் ஷூ அணிந்து நடிப்பது சற்று நகைப்புக்கு உரியதாக உள்ளது என்று கிண்டல் செய்யும்விதமாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. அந்தப் பத்திரிகைக்கு பதிலடி கொடுக்கும்விதமாக அதனைப் படம் எடுத்து அமிதாப்ஜி, தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு தனது பயோடேட்டாவை அதனுடன் வெளியிட்டார். 

ஜாப் அப்ளிகேஷன்

பெயர் - அபிதாப் பச்சன்
பிறந்த தேதி - 11.10.1942 / வயது - 76 /உயரம் - 6’2’’

அனுபவம் - 49 வருடங்கள், கிட்டத்தட்ட 200 படங்கள்

இந்த நடிகைகளுடன் நடிக்க நான் தயார்....உங்களுக்கு உயரப் பிரச்னைகள் ஒருபோதும் இருக்காது! 

இது பற்றி ஷாஹித் மற்றும் அமீர் என்ன நினைப்பார்களோ தெரியாது, ஆனால் நிச்சயம் கத்ரீனா மற்றும் தீபிகாவின் முகங்களில் புன்னகை பூக்கக் கூடும். தீபிகாவுடன் 'பிகு' என்ற படத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் அமிதாப் நடித்துள்ளார். அப்படத்தில் அமிதாப் பச்சனின் மகளாக தீபிகா நடித்திருந்தார். அண்மையில் வெளியான பத்மாவத் படத்தில் தீபிகாவின் சிறப்பான நடிப்பைப் பார்த்து அமிதாப் தன் கைப்பட ஒரு பாராட்டுக் கடிதத்தை எழுதி அனுப்பினார்.

பத்மாவத் படத்திற்கு பிறகு தீபிகாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் பாலிவுட்டே ஆவலாக எதிர்நோக்கிய நிலையில், வட இந்தியாவில் ரவுடி கும்பலுக்கும் மாபியா கொள்ளைக்கார கூட்டத்துக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த சப்னா திதி என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து படமெடுக்கிறார்கள் என்றும், அப்படத்தில் தீபிகா சப்னா தீதியாக நடிக்கிறார் என்றும் இதற்காக உடல் எடை கூட்டி வருகிறார் என்றும் தகவல்கள் வந்தன.

சப்னா திதியின் கணவர் காலியாவாக இர்பான் கான் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் இந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்தது. பிகு திரைப்படத்துக்குப் பிறகு தீபிகா இர்பான் இணையும் படமிது. இந்தப் படத்தின் பெயர் ராணி. மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அக்டோபர் மாதம் தீபாவளி வெளியீடாக இத்திரைப்படம் வெளியாகும் போன்ற உபரித் தகவல்களும் வெளியாகின.

பாலிவுட் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் பரத்வாஜ் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்தை மேற்கொள்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டார்கள். கடந்த ஆண்டு கங்கனா ரனாவத், ஷாஹித் கபூர் மற்றும் சயஃப் அலிகான் நடிப்பில் வெளியான ரங்கூன் படம் இவர் இயக்கத்தில் வெளியானது. விஷால் பரத்வாஜ் தீபிகா படுகோன் அவரது படத்தில் நடிக்கவிருப்பது உண்மைதான் ஆனால் அது சப்னா திதியின் கதை என்பதும் அப்படத்தின் பெயர் ராணி என்பதும் எனக்கே தெரியாத புதிய செய்தி என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தீபிகாவின் அடுத்த படத்தின் தகவல்களை அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடுவோம் அதுவரை ரசிகர்கள் காத்திருக்கவும் என்று கேட்டுக் கொண்டனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com