
அமலா பால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இதில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார் அமலா. மேலும், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளஸ்ஸி இயக்கும் ‘ஆடு ஜீவிதம்’என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் அமலா பால்.
இந்தப் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். எழுத்தாளர் பென்யமினின் நாவல்தான் அதே பெயரில் திரைப்பாமாகிறது.
இந்தப் படத்தைப் பற்றிய முதல் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளி வந்தது. ஆனால் பிரித்விராஜின் இப்படத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனதால் தாமதமாகிவிட்டது. தற்போது ஆடு ஜீவிதம் படத்துக்காக பிருத்திவிராஜ் இரண்டு வருடம் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். இது மிகவும் அழகான கதை என்று கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் 25 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படமொன்றில் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.