நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் பச்சன் பகிர்ந்த ட்வீட்! 

நமக்கு பிரியமானவர்களும் மனத்துக்கு நெருக்கமானவர்களும் இறந்து விட்டால் அந்தச் செய்தி நம்மை வந்து அடையும் முன்னரே
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் பச்சன் பகிர்ந்த ட்வீட்! 
Updated on
1 min read

நமக்கு பிரியமானவர்களும் மனத்துக்கு நெருக்கமானவர்களும் இறந்து விட்டால் அந்தச் செய்தி நம்மை வந்து அடையும் முன்பே, நமது உள்ளுணர்வுக்குத் தெரிந்து விடும். இனம் தெரியாத சங்கடம் இதயத்தை கசக்கிப் பிழியும். இன்று காலை ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்டுத் தான் பலர் எழுந்தனர். திரை உலகினர், ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியர்களை அனைவரையும் ஒரு நிமிடமாவது இந்த மரணச் செய்தி அசைத்திருக்கும்.

பிப்ரவரி 24-ம் தேதி 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். இந்தத் தகவலை அவரது உயிர் பிரியும்போது உடனிருந்த அவரது கணவர் போனி கபூர் உறுதி செய்தார். மீடியாவுக்கு இந்தச் செய்தி பகிரப்பட்டது மூன்று மணிக்குத்தான். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் இரவு 1.15 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் 'Na jaane kyun, eik ajeeb si gharaahat ho rahi hai.' என்று எழுதியுள்ளார்.  'ஏன் என்று தெரியவில்லை. மனது ஒரு நிலையில் இல்லை’ என தன்னுடைய சக நடிகையின் மரணச் செய்தியை உள்ளுணர்வினால் உணர்ந்திருக்கலாம் அமிதாப் பச்சன் அல்லது அவருக்கு இந்தத் தகவல் முதலில் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். 

அமிதாப் பச்சனின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் துயரத்துடன் பகிரப்பட்டு வருகிறது. இன்குலாப், ஆக்ரி ராஸ்தா, குதா கவ்வா ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com