ஈடு செய்ய முடியாத இழப்பு! கதறி அழுத ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி

இன்று இந்திய திரை ரசிகர்களுக்கு ஒரு கருப்பு தினம். நடிகை ஸ்ரீதேவியின் மரணச் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது
ஈடு செய்ய முடியாத இழப்பு! கதறி அழுத ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி
Published on
Updated on
1 min read

இன்று இந்திய திரை ரசிகர்களுக்கு ஒரு கருப்பு தினம். நடிகை ஸ்ரீதேவியின் மரணச் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

50 வருட திரை வாழ்க்கை, புகழின் உச்சம், மூக்கு, உதடு அறுவை சிகிச்சை, திருமண வாழ்க்கை, சினிமாவில் ரீ எண்ட்ரி, என ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் சர்ச்சைகள் இருந்து வந்தாலும் அவற்றை எல்லாம் மீறி என்றும் மாறாத புன்னகையுடன் எல்லாவற்றையும் புறம் தள்ளி வாழ்க்கையை தான் விரும்பிய வண்ணம் வாழ்ந்து வந்தார் அவர். பேரழகும், அதிராத பேச்சும், இனிமையான குரலும், இயல்பான நடிப்பும், பாசிட்டிவ் எண்ணங்களும் அவரது வெற்றியின் ஒரு சில காரணங்களாகச் சொல்லலாம்.

ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள். மூத்த பெண் ஜான்வி, இளையவர் குஷி. இருவருக்கும் ரோல் மாடலாக விளங்கியவர் ஸ்ரீதேவி. அவரின் மூத்த மகள் ஜான்வி கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மும்பையில் அவர் நடிக்கும் முதல் படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தாயுடன் அவர் துபாய்க்குச் செல்லவில்லை. நேற்று நள்ளிரவில் தன்னுடைய அம்மாவின் மரணச் செய்திக் கேட்டு ஜான்வி கதறித் துடித்தார். ஸ்ரீதேவியின் இழப்பு திரைத் துறைக்கு ஏற்பட்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டுவிட்டுள்ளது. ஜான்வி, குஷி மற்றும் போனி கபூருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் ஆறுதல் அளித்து வருகின்றனர்.

54 வயதிலேயே மரணம் அடைந்துவிட்ட அவருடைய மரணத்தை ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. துபாயில் இறந்த ஸ்ரீதேவியின் உடல் இரவு ஒரு மணிக்கு மும்பை கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அவரது ரசிகர்கள் மும்பை அந்தேரியில் இருக்கும் அவரது வீட்டின் முன்பு சோகத்துடன் குவிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com