சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகிறாரா மக்கள் செல்வன் விஜய் சேதுபதி?

காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகிறாரா மக்கள் செல்வன் விஜய் சேதுபதி?
Updated on
1 min read

காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அண்மையில் வெளிவந்தது. இது குறித்து, கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில், 'என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. என் கனவு நிறைவேறுகிற தருணம் இது. நன்றி தலைவா...' என்று மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் வெளிவந்துள்ளது. பவுர்ஃபுல்லான ஒரு வில்லன் கதாபாத்திரம் என்பதால் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க கேட்டுள்ளார்கள் படக்குழுவினர். இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை கார்த்திக் சுப்புராஜ் விரைவில்  தனது ட்விட்டரில் வெளியிடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com