
நடிகர் சிம்பு இசையில், நடிகை ஓவியா பாடும் ஆல்பம் புத்தாண்டு இரவிலிருந்து வைரலாகிவருகிறது.
நடிகர் சிம்பு புத்தாண்டை முன்னிட்டு புதிய இசை ஆல்பம் ஒன்றினை உருவாக்கி இருக்கிறார். ‘மரண மட்டை’ என்று இந்த ஆல்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ‘ஹே எவ்ரிபடி ஹேப்பி நியூ இயர்’ என்ற சகலகலா வல்லவன் படத்திலிருந்து பாடல் காட்சி ஆரம்பமாக, காட்சி மாறி ஓவியா, 'ஏய் நிறுத்து நிறுத்து, நிறுத்து.. எத்தனை நாள் தான் நியூ இயர்க்கு இதே பாட்டு, எனக்கு புது பாட்டு வேணும்...' என்ற வசனத்துடன் இந்த மரண மட்டைப் பாடலை பாடியிருக்கிறார்.
சிம்பு முதன்முறையாக ஓவியாவுடன் இணைந்து உருவாகியுள்ள இந்த ஆல்பம் இதுவரை இரண்டு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.