சொடக்குப் போட வைத்த பாடல் வைரலாகிறது! நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்!

நானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு அனிருத்தும் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ள படம்
சொடக்குப் போட வைத்த பாடல் வைரலாகிறது! நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்!
Updated on
2 min read

நானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு அனிருத்தும் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தின் பாடல்கள் வெளியானதும் ரசிகர்களின் பலத்த பாராட்டினைப் பெற்றுள்ளது. முதலில் வெளியான நானா தானா, சொடக்கு மற்றும் பீலா பீலா ஆகிய மூன்று பாடல்கள் அதிக கவனம் பெற்றுள்ளது. அனிருத் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ள காதல் பாடல் எங்கே என்று போவது என்ற பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களின் விருப்பப் பாடலாகிவிட்டது. இனிமையாகவும் அதே சமயம் கருத்துள்ளதாகவும் இப்பாடல் அமைந்துள்ளது சிறப்பிலும் சிறப்பு என்கின்றனர் அதனைக் கேட்டு ரசித்தவர்கள். தினமும் நீயும் நானும் காணும் கனவு கருகிப் போவதென்ன என்ற வரிகளில் பேஸ் வாய்ஸில் அனிருத் பாடியுள்ள இந்தப் பாடல் இந்த வருடத் தொடங்கித்தின் இனிமை ட்ரீட் எனலாம்.

அடுத்து, பீலா பீலா பீலா உடாதே எனத் தொடங்கும் பாடல். இது வேகமாகவும் அதே சமயம் இனிமையாகவும் உள்ளபடியால், இந்தப் பாடலும் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

சொடக்கு மேல சொடக்கு போடுது.. இந்தப் பாடல் கேட்பவர்களைத் திரும்பத் திரும்பக் கேட்க வைத்தும், பாட வைத்தும், ஆட்டம் போட வைப்பதுமாகக் கொண்டாட்டமான ஹிட் கொடுத்துள்ளது. இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள், அதனை யூட்யூப்பில் பதிவேற்றம் செய்து இதனை வைரலாக்கி வருகின்றனர். இளமைத் துள்ளலுடன் அதிவேக இசையுடன் அமைந்த இப்பாடல் வெளியான தினத்திலிருந்து அனிருத் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்துவிட்டது.

அடுத்து தலைப்புப் பாடல். இப்பாடலை எழுதியவர் கவிஞர் தாமரை. 'இது வலியால் வாடிய கூட்டமடா..ஒரு புதிதானப் போராட்டமடா..இது தேடிச் சேர்ந்த கூட்டமில்லை.. தானா சேர்ந்த கூ‌ட்ட‌மடா..’ என்ற வரிகள் படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்யும்விதமாக அமைந்துள்ளது.  

இந்தப் படம் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பரிசாக வெளியாக உள்ளது. இப்படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவது இதுவே முதன்முறையாகும். படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com