இயக்குநர் கார்த்திக் நரேன் மூன்றாவது படத்துக்குத் தயார்!

எனது மூன்றாவது படத்துக்குக் கையெழுத்திட்டுள்ளேன். இந்தக் கதை என் மனத்துக்கு நெருக்கமானது...
இயக்குநர் கார்த்திக் நரேன் மூன்றாவது படத்துக்குத் தயார்!
Published on
Updated on
1 min read

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன்.

அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்துள்ளார். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரியா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். 2018 பிப்ரவரியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது படம் இன்னும் வெளிவராத நிலையில் 3-வது படத்துக்குத் தயாராகிவிட்டார் கார்த்திக் நரேன். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

எனது மூன்றாவது படத்துக்குக் கையெழுத்திட்டுள்ளேன். இந்தக் கதை என் மனத்துக்கு நெருக்கமானது. விவரங்கள் விரைவில் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com