மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

கர்ப்பமாக உள்ளேனா?: நடிகை பிபாசு பாசு ஆவேச பதில்!

இதுபோன்ற தருணங்கள் கடுப்பைக் கிளப்புகின்றன. பொறுமையாக இருக்கவும். எங்களுக்கு எப்போது தேவையோ...

News image
Updated On :18 ஜனவரி 2018, 9:17 am

எழில்

பிரபல நடிகை பிபாசா பாசு கர்ப்பமாக உள்ளதாகச் சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இதுபோன்ற செய்திகள் வெளிவருவது முதல்முறையல்ல. கடந்தவருடம் இதுபோன்ற ஒரு செய்தி வெளிவந்து அதை பிபாசா பாசு மறுத்த நிலையில் மீண்டுமொரு செய்தி, மீண்டுமொரு மறுப்பு வெளியாகியுள்ளன.

பிபாசா பாசு ட்விட்டரில் இதுபற்றி கூறியதாவது: 

மீண்டும் வேடிக்கையாக உணர்கிறேன். என்னுடைய மடியில் என் பையை வைத்து காரில் ஏறினேன். உடனே சில ஊடகங்கள் நான் கர்ப்பமாக உள்ளதாக எழுதிவிட்டன. நண்பர்களே, நான் கர்ப்பமாக இல்லை. இதுபோன்ற தருணங்கள் கடுப்பைக் கிளப்புகின்றன. பொறுமையாக இருக்கவும். எங்களுக்கு எப்போது தேவையோ அப்போதுதான் அது நடக்கும் என்று 39 வயது பிபாசா எழுதியுள்ளார்.

அலோன் படத்தில் பிபாசா பாசுவும் நடிகர் கரண் சிங்கும் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தபோது காதலர்கள் ஆனார்கள். பிறகு, 2016-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.