சன் டிவியிலிருந்து விலகி விட்டேன்: தொகுப்பாளினி அஞ்சனா அறிவிப்பு

சன் டிவியிலிருந்து விலகி விட்டேன்: தொகுப்பாளினி அஞ்சனா அறிவிப்பு

தனிப்பட்டமுறையிலான ஓர் இடைவேளை தேவைப்பட்டது. எனவே இந்த முடிவு...
Published on

சன் டிவியிலிருந்து விலகிவிட்டதாக பிரபல தொகுப்பாளினி அஞ்சனா கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் அவர் கூறியதாவது:

நான் ஏன் நேரலை நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று கேள்வி கேட்பவர்களுக்காக இந்த விளக்கம். நான் சன் மியூசிக்கிலிருந்து விலகிவிட்டேன். தனிப்பட்டமுறையிலான ஓர் இடைவேளை தேவைப்பட்டது. எனவே இந்த முடிவு. 10 வருடங்களாகக் கிடைத்த சந்தோஷங்கள், சண்டைகள், ஒற்றுமை, ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளன. அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

சன் மியூசிக்கில் வேலை செய்தது பல நல்ல அனுபவங்களைத் தந்துள்ளது. பத்து வருடம் பணிபுரிய வாய்ப்பளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com