பவன் கல்யாணின் மெகா ஹிட் ‘தொலி பிரேமா’ டைட்டிலில் வருண் தேஜ் சோபிப்பாரா?

பவனின்  ‘தொலி பிரேமா’ போல வருணின் தொலி பிரேமாவும் ரசிகர்களின் உள்ளத்தைக் கவருமா? என படம் வெளிவந்தால் தெரியும்.
பவன் கல்யாணின் மெகா ஹிட் ‘தொலி பிரேமா’ டைட்டிலில் வருண் தேஜ் சோபிப்பாரா?
Updated on
1 min read

‘தொலி பிரேமா’  90 களில் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த திரைப்படம். இயக்கம் தமிழ்நாட்டுக்காரரான கருணாகரன். நாயகி கீர்த்தி ரெட்டி. ஒரு இளைஞனின் முதல் காதலை வெகு அழகாகத் திரைப்படமாக்கிய காவியம் அது. வெளி வந்து புதிதில் வெகுவாகப் பாராட்டுப் பெற்ற தெலுங்குப் படங்களில் இதற்குப் பிரதான இடமுண்டு. 

இப்போதைய புதிய டிரெண்ட். மெகா ஹிட் அடித்த பழைய திரைப்படங்களின் பெயர்களை புதிய திரைப்படங்களுக்குச் சூட்டுவது. அப்படித்தான் சித்தப்பா பவனின் ‘தொலி பிரேமா’ இப்போது நாகேந்திர பாபுவின் மகனும், வளர்ந்து வரும் டோலிவுட் நாயகனுமான வருண் தேஜ் நடிப்பில் மீண்டும் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் நாயகி ராசி கன்னா. பவனின்  ‘தொலி பிரேமா’ போல வருணின் தொலி பிரேமாவும் ரசிகர்களின் உள்ளத்தைக் கவருமா? என படம் வெளிவந்தால் தெரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com