ஸ்ரேயாவின் ‘புத்தாண்டு சபதம்’ என்ன தெரியுமா?

புது வருஷத்துல ஃபிட்டா இருக்கனும்னு சபதம் எடுத்துக்கறதெல்லாம் சரி தான். ஆனா, வெறுமே உடம்பு மட்டும் ஃபிட்டா இருந்தா போதுமா? மனசுன்னு ஒன்னு இருக்கே,
ஸ்ரேயாவின் ‘புத்தாண்டு சபதம்’ என்ன தெரியுமா?
Published on
Updated on
1 min read

ஸ்ரேயா சொல்றாங்க, ஒருநாளைக்கு ஒரு நிமிஷமாவது யோகா செய்வதற்கு ஒதுக்கியே ஆகனும்னு. அது தான் அவரோட இந்த வருட புத்தாண்டு சபதமாம்! அதாவது புது வருடத் தீர்மானம். அதுமட்டுமில்லாம, எல்லோரும் புது வருஷத்துல ஃபிட்டா இருக்கனும்னு சபதம் எடுத்துக்கறதெல்லாம் சரி தான். ஆனா, வெறுமே உடம்பு மட்டும் ஃபிட்டா இருந்தா போதுமா? மனசுன்னு ஒன்னு இருக்கே, அது ஃபிட்டா இல்லைன்னா சகலமும் போச்சே! அது ஊவாமுள் மாதிரி ஆரோக்யமா இருக்கறவங்களையும் சதா சோகத்துல மூழ்க வச்சு சாய்ச்சிடுமே?! ஸோ... ஃபிட்டா இருக்கறதுன்னா உடம்பு, மனசு ரெண்டுமே சேர்ந்து ஃபிட்டா இருந்தாகனும். அது தான் உண்மையான ஆரோக்யமா இருக்க முடியும்னு சொல்றாங்க. அதனால தான் அவங்க இந்த வருஷம் தினம் ஒரு நிமிஷம் யோகா பண்றதை தன்னுடைய புத்தாண்டு சபதமா முடிவு பண்ணியிருக்காங்க. ஸ்ரேயா சொல்றது 100% சரின்னு நினைச்சா ரசிகர்களும் அதை பின்பற்றுங்களேன். நல்லதை யார் சொன்னாலும் ஏத்துக்கலாமே!

ஸ்ரேயா யோகா பயிற்சி செய்யும் வீடியோ...

யோகா செய்யுங்கன்னு மட்டும் சொல்லாம, செய்தும் காட்டியிருக்காங்க. இதைப் பார்த்தாவது ஃபிட்டா இருக்க கத்துக்காம போனா இந்த சமூகம் நம்மை மன்னிக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com