ஒரு பொண்ணு தப்பு செய்யறதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிக்கணும்! கௌதம் மேனனின் ஒன்றாக நிறுவனம் வெளியிட்டுள்ள குறும்படம்!

பதின் வயதினரை குழந்தைகள் என்பதா வளர்ந்தவர்கள் என்பதா? அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கும்
ஒரு பொண்ணு தப்பு செய்யறதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிக்கணும்! கௌதம் மேனனின் ஒன்றாக நிறுவனம் வெளியிட்டுள்ள குறும்படம்!
Published on
Updated on
1 min read

பதின் வயதினரை குழந்தைகள் என்பதா வளர்ந்தவர்கள் என்பதா? அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தங்களுடைய குழந்தைப் பருவத்தை மெள்ள இழந்து கொண்டிருக்கும் வளர் இளம் பருவத்தினர். புத்தம் புது இளைஞர்கள். இவ்வயதில் ஆண்களாகட்டும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, சதா சர்வ காலம் தன்னைப் பற்றியே அதிகம் சிந்திக்கும் மனப்பான்மை ஏற்படும். நான் எனது என்ற தன்னியல்பும், சுயம் சார்ந்த சிந்தனையும் தோன்றும் சமயம், மேலும் தன்னுடல் பற்றிய அதீத உணர்வுகள் உருவாகும் காலகட்டம் இது.

இந்த வயதில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் கண்ணாடியை கையாள்வது போலத்தான் அவர்களிடம் பழக வேண்டியிருக்கிறது. அவர்களை அதிக கண்டிப்புடன் வளர்த்தாலும் பிரச்னை, சுதந்திரமாக வளர்த்தாலும் பிரச்னை. காரணம் கண்டித்தால் மனம் உடைந்து அவர்களில் சிலர் எடுக்கும் தவறான முடிவுகள் தீவினையாக பெற்றோரின் வாழ்நாள் முழுவதும் சுட்டெரிக்கும். கண்டிக்காமல் போனால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் பெற்றோர்களின் மீதும் முக்கியமாக தாயின் மீதும் தான் பழிச் சொற்கள் வந்து சேரும். என்ன வளர்த்திருக்கா ஒரு புள்ளைய என்ற சொற்றொடர் ஒரு தாயைத் துரத்துவது போல தந்தையைத் துரத்துவது இல்லை. மேலும் ஆண் பெண் அது சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி இணைந்து தவறு செய்தால் அதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். முள்ளில் சேலை விழுந்தாலும், சேலையை முள் கிழித்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்ற பழைய சொல்லாடல் என்றும் பொருந்தும். ஆனால் காலந்தோறும் அணுகுமுறை என்பது மாறிவருகிறது. 

அத்தகைய ஒரு அணுகுமுறையை அடித்தளமாக வைத்து, அண்மையில் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ஒன்றாக எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார். மா என்று தலைப்புடைய இக்குறும்படத்தை அன்புற்குரிய அம்மாவுக்கு என்று சமர்ப்பணம் செய்துள்ளார் கெளதம் மேனன். 'லட்சுமி’ குறும்படப் புகழ் இயக்குநர் சர்ஜுன் கே.எம் இயக்கம் மற்றும் படத்தொகுப்பில், சுதர்ஷன் ஸ்ரீநிவாஸனின் ஒளிப்பதிவில், சுந்தரமூத்தி கே.எஸ் இசையில் இக்குறும்படம் வலைஞர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து ட்ரண்டிங்கில் டாப் 5 வரிசையில் உள்ளது.

இக்காலகட்டத்துக்குத் தேவையான கதைக் களன். தைரியமான அணுகுமுறை. மகளாக அனிக்காவும் தாயாக கனி குஸ்ருதியும் நடித்துள்ளனர் (இவர் மிஷ்கினின் பிசாசு படத்தில் குடிகாரனின் மனைவியாக நடித்தவர்). இருவரின் இயல்பான நடிப்பும் உடல்மொழியும் இப்படத்திற்கு பெரிய பலம். பதின்வயதுக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு தரவல்ல இந்தக் குறும்படம் இதோ 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com