நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தின் பெயர் என்ன?
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து காமெடி மர்றும் கதையம்சம் உள்ள படங்களை எடுத்தவர் இயக்குநர் பொன்ராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்களில் இவர்கள் இருவரின் கூட்டணி கலாட்டாவை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இப்படங்களில் சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் சில விஷயங்களையும் உள்ளடக்கியிருப்பார் இயக்குநர் பொன்ராம்.
இந்த இருவரும் சீமராசா எனும் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள் என்பதும், இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார், சூரிக்கு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பதெல்லாம் ஏற்கனவே வெளிவந்த செய்திகள்தான். தென்காசியில் சீமராசாவின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது. தனது பிறந்த நாளில் இப்படத்தின் தலைப்பையும் அறிவிக்கப் போவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.