‘அருவி’யில் லஷ்மி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்தது குறித்து லஷ்மி கோபாலசுவாமி என்ன சொல்கிறார்?

அவரது நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்திருப்பதோடு சமூகத்தில் அதற்கு நல்ல வரவேற்பும் இருப்பது கண்டு சந்தோசப் படலாமே’ என்கிறார் லஷ்மி கோபாலசுவாமி
‘அருவி’யில் லஷ்மி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்தது குறித்து லஷ்மி கோபாலசுவாமி என்ன சொல்கிறார்?
Updated on
1 min read

சமீபத்திய ‘அருவி’ திரைப்படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை இமிடேட் செய்து ‘சொல்வதெல்லாம் சத்யம்’ என்ற பெயரில் ஒரு காட்சியமைப்பு சேர்க்கப்பட்டிருந்தது. நிஜத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளரான லஷ்மி ராமகிருஷ்ணன் கதாபாத்திரத்தை, திரையில் அருவி படத்திற்காக லஷ்மி கோபாலசுவாமி இமிடேட் செய்திருந்தார். அவரிடம் இது குறித்து இணைய நேர்காணலொன்றில் கேள்வி எழுப்பபட்ட போது அவர் சொன்ன பதில்;

‘ஒரு வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோ என்ற வகையில் லஷ்மி ராமகிருஷ்ணன் தனது ஷோ இமிடேட் செய்யப்படுவது குறித்து இந்த விஷயத்தை லைட்டாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு ஷோ வெற்றி பெற்றதனால் அதனுடைய தாக்கம் சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் பரவி இருக்கிறது என்பதே உண்மை எனும் போது தான் இமிடேட் செய்யப்படுவதை அவர் சந்தோசமாகவே அணுகலாம் என்கிறர் லஷ்மி கோபாலசுவாமி. ஏனெனில், வெற்றி பெறாத மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாத எந்த ஒரு விஷயத்தையும் யாரும் பொருட்படுத்தவே போவதில்லை. அவரது நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்திருப்பதோடு சமூகத்தில் அதற்கு நல்ல வரவேற்பும் இருப்பது கண்டு சந்தோசப் படலாமே’ என்கிறார் லஷ்மி கோபாலசுவாமி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com