டீச்சராக ஆசைப்படும் சமந்தா!

சைதன்யாவின் குடும்பத்துக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஃபிலிம் ஸ்டுடியோவுக்குச் சொந்தமான நடிப்புக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சி மற்றும் சினிமா தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து
டீச்சராக ஆசைப்படும் சமந்தா!
Updated on
1 min read

நடிகை சமந்தா கடந்த ஆண்டின் இறுதியில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை மணந்து திருமண வாழ்வில் சந்தோசமாக அடியெடுத்து வைத்தார். தனது திருமணத்திற்கு முன்பே வெறும் நடிகையாக மட்டுமே தான் அடையாளம் காணப்படக் கூடாது என நினைத்ததால் தெலுங்கான மாநில அரசின் கைத்தறி வளர்ச்சித் துறையுடன் இணைந்து அரசின் கைத்தறி தூதராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து தற்போது சைதன்யாவின் குடும்பத்துக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஃபிலிம் ஸ்டுடியோவுக்குச் சொந்தமான நடிப்புக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சி மற்றும் சினிமா தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து வகுப்பெடுத்து டீச்சராகவும் ஆர்வம் கொண்டிருக்கிறாராம். 

காற்றுக்கென்ன வேலி! கல்லூரியில் படிக்கையில் பொருளாதார மாணவியாக இருந்த சமந்தா, பின்னர் தமிழ்த்திரைப்படங்களில் அடியெடுத்து வைத்தது எப்படி? ஆரம்ப காலத்தில் தனக்கான முதல் திரைப்பட வாய்ப்புகளை அவர் எப்படி பெற்றார்? கிடைத்த வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்தி திரையுலகில் தனக்கென ஒரு பிரத்யேக இடத்தை தக்க வைத்துக் கொண்டார் என்பதையெல்லாம் தங்களது நடிப்புக் கல்லூரியில் பயில வரும் மாணவ, மாணவிகளுக்குச் சொல்லி அசத்த இருக்கிறாராம் சமந்தா. 

சமந்தாவின் பல்துறை ஆர்வங்களை மெருகேற்றிக் கொள்ள இப்படி நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து அமைய அவரை வாழ்த்துவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com