பிரிந்து சென்ற மனைவியின் வீட்டில் திருடியதாக பிரபல நடிகர் கைது!

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் பொருள்களைத் திருடிச் சென்றதாகவும் சம்ரத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது...
பிரிந்து சென்ற மனைவியின் வீட்டில் திருடியதாக பிரபல நடிகர் கைது!
Updated on
2 min read

நடிகர் சம்ரத் ரெட்டியும் இண்டீரியர் டிசைனரான ஹரிதாவும் 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அவரைப் பிரிந்தார் ஹரிதா. பிறகு, வரதட்சணைக் கொடுமை செய்வதாக சம்ரத் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சம்ரத்துக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சம்ரத்துக்கு போதை மருந்துக்கு அடிமையாகியுள்ளார், அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார் ஹரிதா. ஆனால் சம்ரத் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என்று ஹரிதா கூறினார். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. இதனால் தவறான குற்றச்சாட்டுகளை என் மீது திணிக்கிறார் என்றார். 

இந்நிலையில் மதாபூரில் உள்ள தன்னுடைய ஃபிளாட்டினுள்ளே தன் தங்கையின் துணையுடன் புகுந்து மதிப்புமிக்க பொருள்களைத் திருடியதாக சம்ரத் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார் ஹரிதா. இதையடுத்து காவல்துறை சம்ரத்தைக் கைது செய்துள்ளது. 

சம்ரத்தின் ஃபிளாட்டில் ஹரிதா தற்போது வசித்து வருகிறார். ஜனவரி 13 அன்று ஹரிதா வெளியூர் சென்றிருந்தபோது அந்த வீட்டுக்குள் சம்ரத்தும் அவருடைய சகோதரியும் உள்ளே நுழைந்துள்ளார்கள். சிசிடிவி கேமரா உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள முக்கிய பொருள்களைத் திருடிச் சென்றுள்ளார்கள் என்று மதாபூர் காவல்நிலைய ஆய்வாளர் கலிங்கா ராவ் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் பொருள்களைத் திருடிச் சென்றதாகவும் சம்ரத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறை சம்ரத்தைக் கைது செய்துள்ளது.

2010-ல் வெளியான Panchakshari என்கிற படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சம்ரத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com