தன்னை விட 10 வயது இளையவரைக் காதலிக்கிறாரா பிரியங்கா சோப்ரா?

விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.
தன்னை விட 10 வயது இளையவரைக் காதலிக்கிறாரா பிரியங்கா சோப்ரா?
Published on
Updated on
3 min read

விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின் பாலிவுட்டில் பிரபலமாகி, தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் புகழ்ப்பெற்ற நடிகையாகிவிட்டார்.

பிஸி என்று சுருக்கமாக அமெரிக்காவிலும், இந்தியாவிலும் அழைக்கப்படும்  பிரியங்கா சோப்ரா,  முன்னாள்   உலக   அழகி,   நடிகை,  பாடகி,  படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகத் திறமை உடையவர். இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் இன்று  ஜொலிக்கும் நட்சத்திரம் பிரியங்கா என்றால் மிகையில்லை.

பிரியங்கா நடித்த இரண்டாவது படம், 2003-ல் வெளிவந்த அனில் ஷர்மாவின் 'தி ஹீரோ' எனும் இந்திப் படம். இந்தப் படத்தின் வெற்றி, பாலிவுட் திரையுலகில் அவரைக் காலூன்ற உதவியது. அவரது திரைப் பயணத்தின் திருப்பம், 'ஃபேஷன் என்ற படம்தான்'. மதுர் பண்டார்க்கர் இயக்கத்தில் வெளிவந்த "ஃபேஷன்' படத்தில், ஒரு  சிறு நகரத்து பெண், ஃபேஷன் உலகின்   சவால்களை   வென்றதை கனகச்சிதமா நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் பிரியங்கா. தொடர்ந்து "தோஸ்தானா',  "பர்ஃபீ', "மேரி கோம்', "பாஜிராவ் மஸ்தானி'  போன்ற  வெற்றிப் படங்கள் பலவற்றில் நடித்தார்.

2012-ல் 'இன் மை சிட்டி' எனும் சர்வதேச பாப் ஆல்பம் மூலம் பாடகியாக  அவதாரம்  எடுத்தார். 2013-ல் பிட்புல்லுடன்  இணைந்து  "Exotic'  என்ற ஆல்பம் ஒன்று வெளிவந்தது. அடுத்த ஆல்பம் "I cant make you to love me'.  எல்லா  ஆல்பங்களும் புகழ் பாடின. 2015 -ம் ஆண்டில்  "அலெக்ஸ் பாரிஷ்' என்ற எஃப்பிஐ ரகசிய  போலீசாக குவான்டிகோ எனும்  திகில்  தொடரில் நடித்து உலகப் புகழ்ப் பெற்றார் பிரியங்கா. உலக  நாடுகளில்  தொடருக்கு நல்ல வரவேற்பு. தொடர்ந்து, "பே வாட்ச்' என்ற பிரபல தொடரில் முக்கிய பாத்திரமான விக்டோரியா லீட்ஸ் ஆக நடித்தார். அதில் அவருக்கு வில்லி  கதாபாத்திரம்.  

அமெரிக்காவில்  பாஸ்டனில்  வசித்து  வந்த தனது அத்தை வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் சேர்ந்தார் பிரியங்கா. அந்தக் காலகட்டத்தில் நிற  வேற்றுமையை வெளிப்படையாகவே சந்தித்துள்ளாராம். ப்ரெளனி  (பழுப்பு நிறக்காரி) என்று அவரை சக மாணவர்கள் அழைப்பார்களாம்.

திருமணம்  பற்றி அவரிடம் கேட்டபோது ஒரு பேட்டியில் அதைப் பற்றி  யோசிக்கவே  நேரமில்லை. குழந்தைகள்  பெற்றுக்  கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்  போது  வாழ்க்கையில்  செட்டில்   ஆவது    குறித்து  யோசிப்பேன். அதுவரையில் வரும் பட வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வேன்' என்று கூறியிருந்தார்.

அந்த நேரம் தற்போது வந்துவிட்டது என்பது போல, பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் பாடகர் நிக் ஜோன்ஸுடன் கிசுகிசுக்கப்படுகிறார் பிரியங்கா. பிரியங்கா சோப்ராவின் வயது 35, நிக்கின் வயது 25. ஆனால் காதல் என்று வந்துவிட்டால் வயது வித்யாசம் எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. 

அமெரிக்கா சுதந்திர நாளான ஜுலை 4-ம் தேதி நியூயார்க் நகருக்கு நிக் ஜோனாஸுடன் சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கிருந்து பிரேஸிலுக்குச் சென்று நிக் குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார்.  அதற்குப் பிறகு நிக் இந்தியாவுக்கு வந்து பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ராவை சந்தித்துப் பேசியுள்ளார்.

நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா இருவரும் பல இடங்களுக்குச் ஒன்றாக செல்வதும், ஒரே மாதிரியான மோதிரங்கள் அணிந்திருப்பதும், இருவரும் இன்ஸ்டாகிராமில் பரிமாறிக்கொள்ளும் தகவல்களும் ஒருவருக்கு மற்றவர் மீதுள்ள காதலை உறுதி செய்கின்றன. அண்மையில் இந்த ஜோடி ஜாலியாக சைக்கிள் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com