ஸ்ரீரெட்டியின் ‘காஸ்டிங் கெளச்’ குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ள பிரபல தமிழ் இயக்குனர் & நடிகர்!

ஸ்ரீரெட்டியின் ‘காஸ்டிங் கெளச்’ குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ள பிரபல தமிழ் இயக்குனர் & நடிகர்!
ஸ்ரீரெட்டியின் ‘காஸ்டிங் கெளச்’ குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ள பிரபல தமிழ் இயக்குனர் & நடிகர்!
Published on
Updated on
2 min read

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி என்பவர் கடந்த சில மாதங்களாக டோலிவுட்டில் நிலவும்  ‘காஸ்டிங் கெளச்’ (திரை வாய்ப்புகளுக்காக பாலியல் துஷ்பிரயோகம்) குறித்து ஆதாரங்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் பட அதிபர்களின் வாரிசுகள் தம்மிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகக் கூறி ஸ்ரீரெட்டி சிலரது பெயர்களை வெளியிட்டுள்ளார்.

அதில் டோலிவுட்டை அதிரடித்த பெயர் அபிராம் டகுபதி ( பாகுபலி புகழ் ராணா டகுபதியின் இளைய சகோதரர்). அபிராம் டகுபதி. அவரது தாத்தாவுக்குச் சொந்தமான ராமாநாயுடு ஸ்டுடியோவில் வைத்து பலமுறை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும். அந்தச் சூழ்நிலையில் தான் அபிராமின் ஆசைக்கு இணங்கியது படவாய்ப்புகளைப் பெறுவதற்காகத்தான் என்றும் ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். ஆயினும், அப்படியெல்லாம் அபிராமுடன் இணக்கமாக நடந்து கொண்ட போதும் தான் ஏமாற்றப்பட்டதாகவும்... இதுவரையிலும் அவர் மூலமாக பட வாய்ப்புகள் எதையும் தான் பெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள ஸ்ரீரெட்டி, முடிவாக திரைப்பட உலகில் நடிக்க வாய்ப்புக் கேட்டு அணுகும் இளம்பெண்களை அத்துறையில் இருக்கும் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அவர்களது வாரிசுகள், இடைத்தரகர்கள் போன்றோர் பட வாய்ப்புகள் பெற்றுத்தருவதாகக் கூறி மூளைச்சலவை செய்து தங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு முடிவில் அப்பெண்களை பட வாய்ப்புகள் எதுவும் பெற்றுத்தராமலே ஏமாற்றும் நிலை தொடர்ந்து நீடித்து வருவதை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது எனக்கூறி தன்னைப் போலவே ஏமாற்றப்பட்ட நடிகைகள் மற்றும் இளம்பெண்களை இணைத்துக் கொண்டு ஃபிலிம் சேம்பர் முன் நிர்வாணப் போராட்டம் ஒன்றை அறிவித்தார்.

அந்தப் போராட்டத்தில் ஸ்ரீரெட்டி மட்டுமே பங்கேற்ற நிலையில் பெண் காவலர்களால் கைது செய்யப்பட்டு போராட்டம் நடைபெறாமல் தடுக்கப் பட்டாலும் இன்று வரை ஸ்ரீரெட்டி தான் கையிலெடுத்த அந்த ‘காஸ்டிங் கெளச்’ அவலத்தை விட்டாரில்லை. ஏனெனில் போராட்டத்தைக் கை விடுவதற்கான சூழல் இதுவரை அமையவில்லை என்கிறார் ஸ்ரீரெட்டி.

பெண்கள் திரையுலகில் நடிப்பதற்குத் தானே ஆசைப்படுகிறார்கள். முடிந்தால் அவர்களுக்கு வாய்ப்பு தந்து திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு, அந்தப் பெண்களைப் பகடைக் காய்களாக்கி பெரிய பெரிய பட அதிபர்களும், இயக்குனர்களும், நடிகர்களும், அவர்களை தங்களது சுயநலத்திற்காக அரசியல்வாதிகளுக்கு தாரை வார்த்து கடைசியில் அந்தப் பெண்களை மிரட்டி பாலியல் அடிமைகள் போல செயல்பட வற்புறுத்தக் கூடாது. இது மிகவும் மோசமான அவலம். இந்த நிலை எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இதைப் போன்றதொரு நிலை இனி நடிக்க வரும் இளம்பெண்களுக்கு ஏற்படக்கூடாது என நான் போராடுகிறேன் என்று தனது யூ டியூப் நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீரெட்டியின் வாதத்தில் நியாயம் இருந்தாலும் அவர் அடிக்கடி முகநூலில் சில பிரபலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக ஆதாரங்களை கொச்சையான அர்த்தம் தொனிக்கும் ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் கருத்துரைத்து வருவதை டோலிவுட்டில் நடிகைகளில் சிலரே சகித்துக் கொள்ள இயலாமல் ஸ்ரீரெட்டி குறித்து மட்டமாகவும், ஆக்ரோஷமாகவும் பேட்டியளிப்பது அக்கடபூமியில் தொடர்கதையாகி வருகிறது.

முகநூலில் இதுவரை தமிழ் நடிகர்களையும், இயக்குனர்களையும் குறித்து நாகரீகமாகவே கருத்துரைத்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது முதன்முறையாக பிரபலத் தமிழ் இயக்குனர் மற்றும் நடிகரது பெயரை ஸ்ரீலீக்ஸில் வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவருமே தன்னிடம் பட வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி தவறாக நடந்து கொண்டதாகவும். சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கடந்த பின்பும் அவர்கள் வாய்ப்புகளைப் பெற்றுத்தருவார்கள் எனத் தான் காத்திருப்பதாகவும் அவர்கள் அதை மறந்து விட்டார்கள் எனவும் ஸ்ரீரெட்டி நக்கலாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஜாடையாக அல்ல ஸ்ரீரெட்டி அவர்களது பெயர்களோடு தான் குறிப்பிட்டிருக்கிறார். யாரந்த பிரபல தமிழ் இயக்குனர் & நடிகர்கள் என்றால்? கீழே ஸ்ரீரெட்டியே தனது முகநூலில் அவர்களது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்.

ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டும் பிரபல தமிழ் இயக்குனர்...

ஸ்ரீரெட்டி மிக வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ள தமிழ் நடிகர்...

சம்மந்தப் பட்ட நடிகரும், இயக்குனரும் தங்கள் மீது ஸ்ரீரெட்டி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவிக்கக் காணோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com