மக்கள் இசை வென்றது! ‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை வென்றார் மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்!

‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை வென்றார் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ்
மக்கள் இசை வென்றது! ‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை வென்றார் மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்!
Published on
Updated on
1 min read

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்று செந்தில் கணேஷ் வெற்றியாளாரானார்.  நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ் முதல் இடத்தை பிடித்து சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றது அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இத்தகைய அங்கீகாரங்கள் அவர்களை மேன்மேலும் உற்சாகத்துடன் இயங்க உதவும் என்றனர் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 சீஸன் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. எப்போதும் திரையிசைப் பாடல்களுக்கே முதல் உரிமை தந்து வந்த சேனல், இந்த சீஸனில்தான் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடம் அளித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி தம்பதியர் சமேதமாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரின் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதுடன் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வந்தது. இவர்கள் பாடிய பல பாடல்கள் மக்கள் இசையை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. சொந்த வரிகளில் எழுதப்பட்ட இவர்களின் பாடல்கள் வாழ்வியலுடன் கலந்த பாடல்களாக அமைந்தன. விவசாயிகள், நெசவாளர்கள் என எளிய மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்து உருக்கமாகப் பாடலாக பாடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை இத்தம்பதியருக்குப் பெற்றுத் தந்தன.
 
செந்தில் கணேஷ் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பின் கடைசி பாடலாக `தாண்டவகோனே’ என்ற பாடலை பாடினார். வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு முறை அறிவிக்கப்பட்டது. அந்த வாக்களிப்பில் செந்தில் கணேஷ் முதல் இடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை ரக்‌ஷிதா பிடித்துள்ளார்.

விரைவில் செந்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com